இஸ்லாம் மதத்திற்கு மாற முகலாயர்கள் சலுகைகள் கொடுப்பது போல் நரேந்திர மோடியும் பாஜகவுக்குத் தாவ  சலுகை கொடுக்கிறார்- திரிணாமுல் அமைச்சர் கிண்டல்

மேற்கு வங்க அமைச்சர் ஹகீம்.

திரிணாமூல் ஆட்களை இழுத்து பாஜக தங்களுக்கு சவுகரியம் செய்து கொடுத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிர்ஹாத் ஹகீம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திரிணாமூல் ஆட்களை இழுத்து பாஜக தங்களுக்கு சவுகரியம் செய்து கொடுத்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பிர்ஹாத் ஹகீம் தெரிவித்துள்ளார்.

  கருத்தியல் ரீதியாகச் செல்லும் பாஜகவை தாங்கள் எதிர்கொள்வது கடினம் என்றாலும் திரிணாமுல் கட்சித் தலைவர்களையே தங்கள் கட்சிக்குள் இழுத்து தேர்தலை எதிர்கொள்வது தங்களுக்குச் சவுகரியமாக போய் விட்டது என்கிறார் பிர்ஹாத் ஹகீம்.

  ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “பாஜக எங்களுக்கு சவுகரியம் செய்து கொடுத்துள்ளது. பாஜக பற்றி ஊதிப்பெருக்கப் படுகிறது, அது பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து பிரச்சாரம் செய்வதால் உருவாக்கப்பட்ட ஒன்று, உண்மையான ஒன்றல்ல. அவர் திரும்பிப்பார்த்தால் மேற்கு வங்கத்தில்தான் இருக்கிறார். ஆனால் சமூக நலத்திட்டங்களினால் மக்கள் மம்தா பக்கம்தான் இருக்கின்றனர். நாங்கள் மொத்தம் 65 நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்து வருகிறோம்.

  பாஜக தாங்கள் வேட்பாளர்கள் தேர்விலேயே சோடை போகின்றனர், நிர்வகிக்க முடியவில்லை இவர்கள் எங்கிருந்து ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தையும் நிர்வகிக்கக் போகிறார்கள்.

  முகலாயர்கள் முஸ்லிமாக மாறுவதற்கு இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு சலுகைகள் அளிப்பது போல் மோடி அளித்து பாஜகவுக்கு ஆட்களை இழுக்கிறார்.

  பிற கட்சியின் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகளை வைத்து மிரட்டி பாஜகவில் சேரவோ அடிபணியவோ பணிக்கின்றனர். அல்லது பெரிய தொகையை காட்டி மயக்குகின்றனர் இல்லையெனில் காண்ட்ராக்ட்களை வழங்குகின்றனர்.

  உடனடியாக யாரும் பாஜகவுக்கு தாவுவதில்லை. அல்லது கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாஜகவுக்கும் செல்வதில்லை. அவர்களை ஆசைக்காட்டித்தான் பாஜகவினால் அழைக்க முடிகிறது.

  பாஜக வேட்பாளர்களுக்கு ஒழுக்கம் என்பதே கிடையாது, மக்கள் எப்படி அவர்களை நம்புவார்கள்? பாஜகவிடம் கொள்கை இல்லை எனவே எங்களுக்கு அது சாதகம்.

  மேலும் சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாக பாஜக பயன்படுத்தி அவதூறில் இறங்குவதும் மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர், அவர்களை நம்பவில்லை.

  நானும் மோடி போல், அமித் ஷா போல் இந்தியன் தான், ஒவ்வொரு முஸ்லிமையும் இப்படித்தான் பாகிஸ்தானுடன் பாஜகவினர் சேர்த்து விடுகின்றனர். இப்படித்தான் அவர்கள் சிறுபான்மையினரை நடத்துகின்றனர்.

  பாகிஸ்தான் செய்தித்தாள்களை நான் படிப்பதில்லை, பாஜகவினர் விழுந்து விழுந்து படிக்கின்றனர்.” என்றார் ஹகீம்.
  Published by:Muthukumar
  First published: