சிவகங்கையில் பணப்பட்டுவாடா புகார்: அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்

அதிமுக நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகள் முறையாக சோதனையிடவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள ஆளவந்தான்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதிமுக கல்லல் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகியாகவும், கூத்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநராகவும் உள்ளார். ஆனந்தவள்ளி வீட்டில் வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக, வீட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து மதுரை வருமானவரித்துறை அதிகாரி பெருமாள் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காளிமுத்து, உமாமகேஸ்வரி தலைமையில் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆனந்தவள்ளி வீட்டில் சோதனையிட்டனர்.

  வீட்டின் ஓரத்தில் இருந்த தகர இடுக்குகளில் சந்தகேப்படுமாறு ரூ 70 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து ஆனந்தவள்ளி அதிகாரிகளிடம் கூறும்போது, ‘வீடு பராமரிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி வைத்திருப்பதாக,’ கூறினார். ஆனால் அதற்குரிய ஆதாரத்தை அவரால் சமர்ப்பிக்க முடியாததால் ரூ.70 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது அங்குகூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகள் முறையாக சோதனையிடவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர்: முத்துராமலிங்கம்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: