மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

கோப்புப்படம்

மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து  ஒருசில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளீயாகியுள்ளன.

 • Share this:
  மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து  ஒருசில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது ஒருசில இடங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

  4ம் கட்ட தேர்தலின்போது, கூச்பெஹாரில் உள்ள சிட்லக்குச்சி தொகுதிக்கு உட்பட்ட 126-வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து  பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

  தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை  வெடித்துள்ளது. புர்பா பர்தமான் மாவட்டத்தில் பாஜக- திரிணாமூல காங்கிரஸ் தொண்டர்கள் இடையே  நேற்று நடைபெற்ற மோதலில் பாஜகவினர் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதேபோல், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தங்கள் கட்சி தொண்டர்களை பாஜகவினர் தாக்கியதாகவும் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

  பல்வேறு இடங்களில் வீடுகள் அடித்து நெறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கள் தொண்டர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாகவும் மாநில காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

  Must Read : இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் கவலையளி்க்கும் சீரம் நிறுவனத்தின் அறிவிப்பு

   

  பாஜகவினரை குறி  வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து  நாடு முழுவதும் பாஜக சார்பில், அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக  அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் நாளை இந்த போராட்டம் நடைபெறுகிறது.

  இந்நிலையில், எதிா்க் கட்சியினா் மீதான இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக உண்மை நிலவர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசை கேட்டுக்கொண்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: