ஒரே நாளில் திமுக-வில் 30,000-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்..!

அடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினால் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் திமுக-வில் 30,000-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்..!
பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 12:13 PM IST
  • Share this:
மு.க.ஸ்டாலினின் 'எல்லோரும் நம்முடன்' திட்டத்தின் மூலம் 24 மணி நேரத்தில் 30,000-க்கும் மேற்பட்டோர் திமுக-வில் இணைந்தனர்.

தி.மு.க.,வின் முப்பெரும் விழாக் கொண்டாட்டத்தையொட்டி, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் “எல்லோரும் நம்முடன்” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பைத் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அடுத்த 45 நாட்களில், குறைந்தது 25 இலட்சம் புதிய ஆன்லைன் உறுப்பினர்களைத் தி.மு.க.வில் இணைக்க திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேர விரும்புவோரின் கனவை எளிமைப்படுத்தும் நோக்கில், இணையம் வழியாகவே கழக உறுப்பினராவதற்கான வாய்ப்பை 18 வயது நிறைவடைந்த எவரும் https://www.dmk.in/joindmk என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களைப் பதிந்து தி.மு.க.,வில் உறுப்பினராகச் சேரலாம்.  இணையம் வழியாக உறுப்பினர் ஆவோர், இதற்கென எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆன்லைன் மூலமாக திமுகவில் புதிதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading