சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

மாதிரிப்படம்

சென்னையில் வாக்குப்பதிவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது பேசிய அவர், சென்னை காவல் எல்லைக்குள் 30 தொகுதிகள் இருப்பதாக கூறினார். 2,083 வாக்குப்பதிவு இடங்களும், 11, 872 வாக்கு மையங்களும் உள்ளன என்றார்.

  • Share this:
தமிழகம் முழுவதும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், தேர்தலின்போது 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வாக்குப்பதிவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது பேசிய அவர், சென்னை காவல் எல்லைக்குள் 30 தொகுதிகள் இருப்பதாக கூறினார். 2,083 வாக்குப்பதிவு இடங்களும், 11, 872 வாக்கு மையங்களும் உள்ளன என்றார்.

தேர்தலுக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் சென்னையை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார். வாக்குப்பதிவு மையங்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னையில் 18 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறிய அவர், இதுவரை 44 கோடியே 11லட்சம் ரூபாய் ரொக்கம் சென்னையில் பிடிபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: