முகப்பு /செய்தி /அரசியல் / ரஜினி மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

ரஜினி மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அந்தோணி ஸ்டாலின் என்பவர் ரஜினிக்காக தனது பெயரில் 'மக்கள் சேவை கட்சியை' பதிவு செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

  • Last Updated :

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் அந்தோணி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் அந்தோணி ஸ்டாலின், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துள்ளதால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன்ற நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இதில் அந்தோணி ஸ்டாலின் என்பவர் ரஜினிக்காக தனது பெயரில் 'மக்கள் சேவை கட்சியை' பதிவு செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்தோணி ஸ்டாலின், விரைவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோ திமுகவில் இணைய உள்ளதாக கூறினார்.

    First published:

    Tags: DMK, MK Stalin, Rajinikanth