மாறன் 2ஜி, ஸ்டாலின் 3ஜி, ராகுல் காந்தி 4 ஜி - குடும்ப அரசியல் விவகாரத்தை விமர்சித்த அமித்ஷா

அமித் ஷா

மாறன் குடும்பம் 2ஜி, கருணாநிதி குடும்பம் 3ஜி, சோனியா காந்தி குடும்பம் 4 ஜி என்று கூறி குடும்ப அரசியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்தார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சுற்றுப்பயணம் முடித்து திரும்பியுள்ளனர்.

  தேசிய தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் போது பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைகளில் மொழிப்பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். அரசியல் பொதுக்கூட்டம் என்பதால் பெரும்பாலும் கட்சி சார்ந்த நபர்கள்தான் இருப்பார்கள். சிறந்த மேடைப் பேச்சாளர்கள் வார்த்தைகளை மிக அழகாக கையாளுவார்கள். சிலரது பேச்சுக்களை கேட்கும்போது இப்படியெல்லாம் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியுமா என நமக்கு என்னத் தோன்றும்.

  சில வேளையில் தேசிய தலைவர் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தும் போது மேடைகளில் இருக்கும் மொழிப்பெயர்பாளர்கள் இதனை தவறான மொழிப்பெயர்ப்பு செய்யக்கூடும். இது தெரியாமல் அந்த தேசிய தலைவரும் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருப்பார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமித் ஷா இப்படியான வார்த்தை ஜாலத்தை பயன்படுத்த அதனை ஹெச்.ராஜா தவறான மொழிப்பெயர்க அதனை அவர் மேடையிலே சுட்டிக்காட்டினார்.


  விழுப்புரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதை ஹெச்.ராஜா மொழிப்பெயர்ப்பு செய்துக்கொண்டிருந்தார். 2ஜி, 3ஜி, 4ஜி, என மாறன், கருணாநிதி குடும்பத்தினரையும் நேருவின் தலைமுறைகளையும் சுட்டிக்காட்டி அமித் ஷா பேசினார். மொழிப்பெயர்பு செய்த ராஜா ’இந்த 2ஜி, 3ஜி, 4ஜி எல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளே இருக்கிறது. 2ஜி மாறன் சகோதரர்களின் டெலிவிசன் சேனல், 3ஜி கருணாநிதி குடும்பத்தோட டெலிவிசன் சேனல், 4ஜி சோனியா குடும்பத்தோடது’ என்றார். அப்போது குறுக்கிட்ட அமித் ஷா, நீங்கள் சொல்வது இல்லை மறுபடியும் முதலில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள் என்றார். மீண்டும் ராஜா பேசும்போது குறுக்கிட்ட அமித் ஷா கூட்டத்தினரை நோக்கி ‘ராஜா ஜீ சரியா ட்ரேன்ஸ்லேட் செய்ய மாட்டேங்கிறார்’ என்று இந்தியில் கூறினார்.

  இதன்பிறகு இந்தியில் கூட்டத்தினரை நோக்கி பேசிய அமித் ஷா, 2ஜி என்பது மாறன் பரம்பரை, 3ஜி என்பது கருணாநிதி பரம்பரை, 4ஜி என்பது நேருவின் பரம்பரை என்றார். ஜெனரேசன் என்ற ஆங்கில வார்த்தையை மையப்படுத்தி 2ஜி,3ஜி,4ஜி என்று அமித் ஷா பேசினார்.  2ஜி ஊழல் மக்கள் மத்தியில் நன்கு அறிந்த ஒரு விஷயம் அதுகுறித்து பேசாமல் அதனை மீண்டும் நினைவூட்டும் விதமாக 2ஜியை சரியாக பயன்படுத்தியுள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அமித் ஷா பேசிய இந்த வீடியோ பாஜகவினரால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: