அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.11 கோடி பறிமுதல்

அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினர் நிதி நிறுவனத்திலிருந்து ரூ.11 கோடி பறிமுதல்

அமைச்சர் எம்.சி.சம்பத்

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான நிதி நிறுனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், இதுவைர 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வருமான வருத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

  இதன் ஒருபகுதியாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின், சம்பந்தியான இளங்கோவனுக்கு சொந்தமான அலுவலங்கள், கல்வி நிறுவனங்களில் கடந்த 26-ம் தேதி சோதனை தொடங்கியது.

  தருமபுரியை சேர்ந்த இவருக்கு, சென்னை தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்ட டி.என்.சி. என்ற நிறுவனம் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. தருமபுரியில் இளங்கோவனுக்குச் சொந்தமான பள்ளி, வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில், முக்கிய சொத்துகள் மற்றும் வரவு, செலவு கணக்கு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

  இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன், கணக்கில் காட்டப்படாத 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
  Published by:Vijay R
  First published: