தமிழகத்தில் பதிவாகாத 1.7 கோடி வாக்குகள்!

தமிழகத்தில் பதிவாகாத  1.7 கோடி வாக்குகள்!

வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் 1 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்கு அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஏப்ரல் 6- ம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக வாக்குச்சதவிகிதம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாட்டினை இந்திய தேர்தல் ஆணையம் செய்தது.

    தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. இதில் கடைசி ஒரு மணிநேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6கோடியே28லட்சத்து69ஆயிரத்து 955 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 61, பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7192 பேர்.

    தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311. இதில் ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156, பெண் வாக்காளர்கள் 2 கோடியே 31 லட்சத்து71 ஆயிரத்து 736 பேர், மூன்றாம் பாலினத்தவர்களில் பதிவான வாக்குகள் 1419. தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகள் 72.81 சதவிகிதமாகும். தமிழகத்தில் 1கோடியே 70 லட்சத்து93 ஆயிரத்து 644 வாக்குகள் பதிவாகவில்லை.

    தமிழகத்தில் மாவட்ட ரீதியிலாக அதிக வாக்குகள் பதிவானதில் கரூர் முதலிடத்தில் உள்ளது. இங்கு 83.96 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டம் என்றால் சென்னைதான். இங்கு 59.15 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளது. தொகுதிவாரியாக பார்த்தால் பாலக்கோடு தொகுதி 87.37 சதவிகித வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 55.51 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: