சவால்களை முறியடிக்க புத்தரின் கொள்கையே தீர்வு: பிரதமர் மோடி

உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு புத்தரின் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சவால்களை முறியடிக்க புத்தரின் கொள்கையே தீர்வு: பிரதமர் மோடி
உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு புத்தரின் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
  • Share this:
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் குரு பூர்ணிமா விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நமக்கு ஞானத்தை வழங்கும் ஆசிரியர்களை இந்த நாளில் நினைவுகூறுவோம் என்றார்.

அகிம்சை, நல்லெண்ணம், நம்பிக்கை உள்ளிட்ட புத்தரின் 8 அம்ச அறிவுரைகள் பல்வேறு சமூகம் மற்றும் நாடுகளுக்கு நல்வழியை காட்டியிருப்பதாகவும் கூறினார்.

உலக நாடுகள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், புத்தரின் கொள்கைகள் மூலமே இந்த சவால்களை முறியடிக்க முடியும் என்று உறுதிபடக் கூறினார்.

மேலும் படிக்க...

உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 62.66 லட்சம் பேர்..

மேலும், புத்தரின் கொள்கைகள் முக்காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading