ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

தீக்குளிப்பதற்காக மண்ணென்ணெய் கேனுடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியர்

தீக்குளிப்பதற்காக மண்ணென்ணெய் கேனுடன் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியர்

தற்கொலைக்கு முயற்சிக்கு முயன்ற தம்பதியினர்

தற்கொலைக்கு முயற்சிக்கு முயன்ற தம்பதியினர்

Perambalur Husband and Wife Suicide Attempt | பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (63) ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான இவர் தனது மனைவி விஜயா(55) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் மண்ணென்ணெய் கேனுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (63) ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான இவர் தனது மனைவி விஜயா(55) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது அவர்களது பையில் மண்ணெண்ணெய் கேன் எடுத்து வந்திருந்தனர். இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் அதனை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தழுதாழை கிராமத்தில் அவருக்கு பாத்தியப்பட்ட, பூர்வீகமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சாகுபடி செய்யும் நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பொழுது கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணேசனின் உறவினர்களான  தழுதாழை கிராமத்தை சேர்ந்த மணிச்செல்வன், கோபிநாத், ஜெகன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, சாகுபடி செய்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து எடுத்து சென்று தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரும்பாவூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டிய தம்பதியினர், கடந்த பல ஆண்டுகளாக தங்களை வாழ விடாமல் துன்புறுத்தி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

தங்களுக்கு வேறு வழியின்றி ஒய்வு பெற்ற அஞ்சலக ஊழியரான தான் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு மண்ணெண்ணெய் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல்

First published:

Tags: Local News, Perambalur