Home /News /perambalur /

திமுக என்றாலே இரட்டை வேடம் தான் - வானதி சீனிவாசன் விமர்சனம்

திமுக என்றாலே இரட்டை வேடம் தான் - வானதி சீனிவாசன் விமர்சனம்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Perambalur | மத்திய அரசிடம் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திருமாவளவன் யாரிடமோ எதையோ எதிர்பார்த்து இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். உண்மையில் தீண்டாமையை ஒழிக்க பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பெரம்பலூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Perambalur, India
  பெரம்பலூரில் மாநில அளவிலான பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, வானதி சீனிவாசன், இந்துக்களுக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பேசியது குறித்த கேள்விக்கு, ”திமுக-வை பொறுத்தவரையில் கட்சியின் தலைவரில் இருந்து அனைத்து நிர்வாகிகளும் இந்து மதத்திற்கு எதிராக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தற்பொழுது கூட சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி அருவருக்கதக்க வகையில் விமர்சனம் செய்திருந்தார்கள். இது சம்பந்தமாக புகார் கொடுத்தும் தமிழக அரசு சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

  தமிழக அரசு இதுபோன்ற இந்துக்களுக்கு எதிரான கருத்துகளுக்கு பின்னணியில் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது. இது போன்று பேசுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றால் கூட, தமிழக அரசு எடுப்பது கிடையாது. இதனை மக்களிடம் பாஜக கட்சி கொண்டு செல்கின்றது. லியோனி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் செய்வதோ அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது குறித்து கட்சியின் மாநில தலைமை முடிவு செய்யும்” என்றார்.

  திருமாவளவன் இந்து கோயில்களின் சொத்துக்கள், டெண்டர்களிலும், மடங்களின் சொத்துக்களின் டெண்டர்களிலும் தங்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ திருமாவளவன் இந்துக்களை பற்றி அவதூறாக பேசுவதை கொள்கையாகக் கொண்டு இருக்கிறார். மற்ற மதங்களை பற்றி அவர் பேசுவது கிடையாது. இதற்கு அவர்களது வாக்கு வங்கி அரசியல் அனுமதிப்பது கிடையாது. ஆனால் இந்துக்கள் சாதுவாக இருப்பதினால் அதனை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  இதில் இந்துத்துவ அமைப்புகள் அனைத்தும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உண்மையாக பார்க்க போனால் திருமாவளவன் தீண்டாமையை ஒழிப்பதற்காக பணி செய்கின்ற பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். உண்மையாகவே தீண்டாமை ஒழிப்பதற்காக ஆர். எஸ். எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

  தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். பாஜக கூட எப்போதெல்லாம் வாய்ப்புகள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களையே முன்னிலைப்படுத்தி வருகிறோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக தமிழகத்தைச் சேர்ந்தவரை மத்திய பிரதேசத்தில் எம்.பி., யாக்கி அவரை அமைச்சராக்கி அழகு பார்த்து இருக்கிறது பாஜக” என்றார். மேலும், “ திருமாவளவன் தொடர்ச்சியாக இது போன்ற இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி யாரிடம் இருந்து எதை எதிர்பார்த்து இதனை செய்கிறார் என்று அவர்தான் சொல்ல வேண்டும்” என்றார்.

  Also see... ஒண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை வௌியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி 

  மேலும், திமுக தலைமை பாஜக தலைமையிடம் இரட்டை வேடம் போடுகிறதா என்ற கேள்விக்கு,” திமுக என்றாலே இரட்டை வேடம் தான். போதை பொருட்களை ஒழிப்பேன் என்று பேசிய முதல்வர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்துள்ளார். பெண்களுக்கு சமூக நீதி என்று பேசுவார்கள் ஆனால் அவர்கள் வீட்டு பெண்களை தவிர வேறு பெண்களுக்கு ஏதாவது முக்கியமான பொறுப்புகளில் இருக்க முடியுமா என்றால் முடியாது என்று கேள்வி எழுப்பினார். அதனால் திமுக என்றாலே இரட்டை வேடம்தான் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். பேட்டியின் போது பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் உட்பட பலர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: BJP, DMK, Perambalur, Vanathi srinivasan

  அடுத்த செய்தி