ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

விளையாட்டு பயிற்சி அளிப்பதுபோல மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.. கைதான பயிற்சியாளர்!

விளையாட்டு பயிற்சி அளிப்பதுபோல மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.. கைதான பயிற்சியாளர்!

விளையாட்டு பயிற்சி அளிப்பதுபோல மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.. கைதான பயிற்சியாளர்!

டேக்வாண்டோ மாஸ்டர், அடிக்கடி குடிபோதையில் வந்து மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு விடுதி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் அமைந்துள்ள விடுதியில் தங்கி 40 மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் சிலருக்கு பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் டேக்வாண்டோ பயிற்சி அளித்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் வந்து மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசி, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோபிநாத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். கடந்த 2ம் தேதி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் விளையாட்டு விடுதியில் சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது உறுதியானது.

இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 7ம் தேதி கோபிநாத் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தர்மராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதன்பின் எவ்வித மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தனர். இதனிடையே டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த தர்மராஜனை திங்கள் இரவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் வளர்ந்து வரும் டேக்வாண்டோ கலையில் பயிற்சி பெறும் மாணவிகளிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த சம்பவம் விளையாட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Girl students, POCSO case, Sexual abuse, Taekwondo