Home /News /perambalur /

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம்

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.. ஓட்டுநர், நடத்துனர் உயிரிழந்த பரிதாபம்

பெரம்பலூர் - சாலை விபத்து

பெரம்பலூர் - சாலை விபத்து

Preambular | சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு 10-க்கும் மேற்பட்டோர் காயம்

    பெரம்பலூர் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் மட்டும் நடத்துனர் இருவரும் சம்பவ இடத்திலே  பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி, தீரன் நகர் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து, நேற்று மாலை சென்னை சென்று விட்டு மீண்டும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன்(40) என்பவர் ஓட்டி வந்தார். உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன்(56) என்பவர் நடத்துனராக இருந்துள்ளார்.  பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புறப்பட்ட அந்த பேருந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எறையூர் சின்னாறு பகுதியில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் முன் பகுதியில் இருந்த ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துனர் முருகன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கள மேடு போலீசார், பொதுமக்களுடன், காயமடைந்தவர்களை  மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    Also see... 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம்.. கர்நாடகாவில் வினோதம்

    மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உடல்களை பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளார்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Perambalur, Road accident

    அடுத்த செய்தி