முகப்பு /செய்தி /பெரம்பலூர் / பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

அரசு  பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

அரசு பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Perambalur Passengers Dead in Running Bus | பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி(60). விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பேருந்து மூலமாக பெரம்பலூருக்கு வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் பாண்டகப்பாடி செல்வதற்காக அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் கிளைக்கு சொந்தமான 14-பி என்ற நகர பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பெரிய பாதை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென வாந்தி எடுத்த சின்னசாமி பேருந்தின் உள்ளேயே மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் சந்திரசேகர், நடத்துனர் செல்வராஜ் ஆகிய இருவரும் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பரிசோதித்ததில் சின்னசாமி உயிர் இழந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ஆர்.ராஜவேல்

First published:

Tags: Local News, Perambalur