ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

பியூட்டி பார்லரில் இருந்து திரும்பிய கல்லூரி மாணவியிடம் வழிப்பறி.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பியூட்டி பார்லரில் இருந்து திரும்பிய கல்லூரி மாணவியிடம் வழிப்பறி.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

பெரம்பலூர் காவல் நிலையம்

பெரம்பலூர் காவல் நிலையம்

Perambalur Robbery | இருசக்கரகத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள், யாழினியை வழிமறித்து மிரட்டி அவர் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்ட 9 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூரில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் 9 சவரன் தங்க நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்த  அருண்பிரசாத் மனைவி யாழினி(30). இவர் எம்பிபிஎஸ் முடித்துள்ள நிலையில்,   பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியில் உள்ள  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்டி மருத்துவ மேற்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுதியில் இருந்து இரவு பெரம்பலூர் நகரில் உள்ள பியூட்டி பார்லர் மற்றும் சூப்பர் மார்க்கெட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி செல்லும் வழியில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள  அபிராமபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருசக்கரத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள், யாழினியை வழிமறித்து மிரட்டி அவர் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் மோதிரம் உள்ளிட்ட 9 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, மருத்துவ கல்லூரியின் சக மாணவர்கள் உதவியுடன் சம்பவம் குறித்து யாழினி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் நகரம்  மட்டுமின்றி மாவட்டத்தில் பிறபகுதிகளிலும் நடைபெறும் இதுபோன்ற வழிபறி மற்றும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செய்தியாளர்: ஆர் ராஜவேல்

First published:

Tags: Crime News, Local News, Perambalur