முகப்பு /செய்தி /பெரம்பலூர் / மகளிர் மட்டும்... பெண் அதிகாரிகளின் கோட்டையாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்!

மகளிர் மட்டும்... பெண் அதிகாரிகளின் கோட்டையாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்!

பெண் அதிகாரிகளின் கோட்டையாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்

பெண் அதிகாரிகளின் கோட்டையாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்

Perambalur News : பெரம்பலூர் மாவட்டம் பெண் அதிகாரிகளின் கோட்டையாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த  ஸ்ரீவெங்கடப்பிரியா பணியிடை மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கற்பகம் புதிய மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 15வது ஆட்சியராகவும், 3வது பெண் ஆட்சியராகவும் இவர் தற்போது பொறுப்பேற்றுள்ளார்.  இவரை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நீதிபதியாக(PDJ) பல்கீஸ் பணியாற்றி வருகிறார். இவர் மட்டுமின்றி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்யாம்ளா தேவி கடந்த மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக  அங்கேயர்கன்னி, பெரம்பலூர் கோட்டாட்சியராக நிறைமதி ஆகியோர் பொறுப்பில் உள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக லலிதா, பெரம்பலூர் நகராட்சியின் தலைவராக அம்பிகா என மாவட்டம் முழுவதிலும் பெண்கள் கோலோட்சியுள்ளனர். இதனால் மீண்டும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பெண்கள் வசமாகியுள்ளது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் சமமானவர்கள் என்ற பேசிக்கொண்டிருந்த காலம் மாறி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே அனைத்து துறைகளிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு சவால்களையும், பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வாரத்தின் 7 நாட்களில் 24 மணி நேரமும்  பணியாற்றி வருகின்றனர். இப்படி பெரம்பலூர் மாவட்டம் பெண்களின் கோட்டையாகியுள்ளது பெண்களிடையே உற்சாகத்தையும், மரியாதையையும் கூடச்செய்கிறது என்றால் அது மிகையில்லை.

செய்தியாளர் : ராஜவேல் - பெரம்பலூர்

First published:

Tags: Local News, Perambalur