Home /News /perambalur /

தனியார் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி.. ஏக்கருக்கு ரூ.30,000 வரை நஷ்டம் என கவலை

தனியார் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி.. ஏக்கருக்கு ரூ.30,000 வரை நஷ்டம் என கவலை

பெரம்பலூரில் மக்காசோளம் சாகுபடி பாதிப்பு

பெரம்பலூரில் மக்காசோளம் சாகுபடி பாதிப்பு

Perambalur | பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் நிறுவன விதைகளை வாங்கி பயன்படுத்திய மக்காச்சோள விவசாயிகள், சரியான  முளைப்புத்திறன் இல்லாததால் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Perambalur, India
    தமிழக அளவில்  மக்காச்சோளம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் சிறப்பிடம் பெற்றுள்ளதோடு, தமிழகத்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 10,000 ஹேக்டேர் நிலப்பரப்பில்  சுமார் 5 லட்சம் மெட்ரிக்டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு காலத்தில் தமிழகத்தில் விவசாயிகள் தற்சார்பு முறையில் தங்களுக்கு தேவையான தானியங்களை உற்பத்தி செய்வதற்கு விதைகளை தாங்கள் சாகுபடி செய்த விளை பொருட்களில் இருந்து தேர்வு செய்து, பதப்படுத்தி பயன்படுத்தினர். தற்போது தனியார் நிறுவனங்களிடம் விதைகளை பெற்று அதனை விளைவித்து விவசாயம் மேற்கொள்கின்றனர்.  இவ்வாறு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படும் விளைப் பொருட்களில் இருந்து விதைகளை தேர்வு செய்ய முடியாது.

    ஒவ்வொரு முறையும் அதே நிறுவனத்திடம் இருந்து விதைகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இப்படி பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களுக்கு விவசாயிகள் தனியார்  நிறுவனங்களிடமிருந்து ஹைபிரிட் விதைகளையே வாங்கி வருகின்றனர். இதற்காக  விதை நிறுவனங்கள் வீதி வீதியாகவும் வீடு வீடாகவும் சென்று தங்கள் விதைகள் அதிகம் முளைப்பு திறன் கொண்டது என்றும், அதிக மகசூல் தரக்கூடியது என்றும் விவசாயிகளை மூளைச்சலவை செய்து வருகின்றனர்.

    இவ்வாறு வீதி வீதியாக மூளைச்சலவை செய்த   தனியார் நிறுவனத்தின் விதைகளை பெரம்பலூர் மாவட்டத்தில் வாங்கி விதைத்த பெரம்பலான விவசாயிகளின் வயல்களில் பாதிக்குமேல் முளைக்காமல் முளைப்பு திறன் குறைந்துள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் உழவுக் கூலி, ஆட்ககள் கூலி, விதை உரம் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் ஏக்கருக்கு சுமார் ரூ25,000 லிருந்து ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும. இதற்கு உரிய இடப்பீட்டினை மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஒரு சில விவசாயிகளை மட்டும் சந்தித்த சம்பந்தப்பட்ட விதை நிறுவன ஊழியர்கள் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் உங்களுக்கு மாற்று விதை தருகிறோம் என்று கூறி, அவர்களிடத்தில் எதையோ எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வேளாண் துறையின் விதை ஆய்வு அதிகாரிகளும், தரமற்ற விதை நிறுவனங்களுக்கு சாதகமாகவே பேசி தங்களை  கஷ்டப்படுத்துவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை விதை தரச்சான்று ஆய்வாளர் சந்திரனிடம் கேட்டபொழுது, அந்த நிறுவனத்தின் விதைகள் முளைப்பு திறன் குறைவதற்கு, தொடர் மழை காரணமாக இருக்கலாம்.  களிமண் பகுதியில் இந்த விதை சரியாக முளைக்காது. விவசாயி அதிக அளவில் தண்ணீர் பாய்ச்சி இருக்கலாம் என்று சில காரணங்களை கூறி சமாளித்து விட்டு போனை துண்டித்துவிட்டார்.

    Also see... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி,உதயகுமாருக்கு மிரட்டல்... ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது...

    பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மழை, அதிக வறட்சி, விலையின்மை, பூச்சி தாக்குதல் இப்படி ஏதாவது ஒரு காரணத்தினால் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு துவக்க காலத்திலே,  முளைப்புத்திறன் குறைந்த விதைகளால் அந்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

    செய்தியாளார்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Farmers, Perambalur

    அடுத்த செய்தி