கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என வலைதளத்தில் செய்தி பரப்பிய 3 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தீபக் (26), திருநாவுக்கரசு மகன் சூரியா (21), பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் சுபாஷ் (21) ஆகிய மூன்று பேரும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என வலைதளத்தில் செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று இரவு இவர்கள் மூவரையும் கைது செய்த பெரம்பலூர் நகர போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Must Read : கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் இருந்து ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்..
இதில் தீபக், சூர்யா ஆகிய இருவரும் அதிமுக தொழில்நுட்பபிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் மீது பிரிவுகளின் Cr.no 517/22 u/s 151 crpc & 7(1)(a) CLA act படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் - ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Kallakurichi, Perambalur, School student