ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய கணவனுக்கு மனைவி கொடுத்த ஷாக்..! பெரம்பலூரில் பகீர் சம்பவம்..

அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய கணவனுக்கு மனைவி கொடுத்த ஷாக்..! பெரம்பலூரில் பகீர் சம்பவம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Crime News : பெரம்பலூர் அருகே அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டிய கணவனுக்கு மனைவி கொடுத்த ஷாக்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூரை சேர்ந்த 25 இளம்பெண்ணுக்கும் அதே ஊரை சேர்ந்த விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், விமல் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டுவதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார்.

மேலும், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், அப்படி தன்னுடன் வாழ வேண்டுமென்றால் 50 சவரன் நகை வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என்றும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உடந்தையாக விமலின் தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அவரது அக்கா மீனா, அக்காவின் கணவர் சிவா ஆகிய 4 பேர் உடந்தையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இது மட்டுமின்றி விமலின் செல்போனில் பார்த்தபோது, அதில் அவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்ததும், அவ்வாறு உறவு வைத்துக் கொண்டதை வீடியோ எடுத்து, அதனை காட்டி அவர்களை மிரட்டி பணம் வாங்கி வருவதாகவும், மேலும் தன்னுடன் தனியாக இருந்தபோது அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விமலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரின் தாய், தந்தையர், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்டவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கொடுத்த புகாரில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : ராஜவேல் - பெரம்பலூர்

First published:

Tags: Crime News, Local News, Perambalur