ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

Pongal 2023 : பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Pongal 2023 : பெரம்பலூர் சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

சிறுவாச்சூர் ஆட்டு சந்தை

சிறுவாச்சூர் ஆட்டு சந்தை

Siruvachur Special Goat Market : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலையில் ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஆடு வளர்க்கும் விவசாயிகளும், வியாபாரிகளும் திரளாக கலந்து கொண்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடந்த சிறப்பு ஆட்டு சந்தையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்ப்போர் மற்றும் விற்பனையாளர்கள் மட்டுமின்றி திருச்சி, கடலூர், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், ஆடு வளர்ப்பவர்களும் லாரி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற ஆடுகளை ஏற்றுக் கொண்டு சந்தைக்கு வந்ததனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இறைச்சிக்காக ஆடுகளை வாங்க  வியாபாரிகள் ஏராளமானோர் சந்தைக்கு வந்திருந்தனர். ஒரு ஆடு ஒன்று ரூ.8,000 முதல் 15,000 வரையில் விலை போனது. இன்று ஒரு நாள் நடந்த பொங்கல் சிறப்பு ஆட்டு சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது.

செய்தியாளர் : ராஜவேல் ராமசாமி - பெரம்பலூர்

First published:

Tags: Local News, Perambalur, Pongal 2023