முகப்பு /செய்தி /பெரம்பலூர் / கோயில் திருவிழா நடந்த விபரீதம்! வான வேடிக்கையால் உயிரிழந்த 7 வயது சிறுவன் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

கோயில் திருவிழா நடந்த விபரீதம்! வான வேடிக்கையால் உயிரிழந்த 7 வயது சிறுவன் - பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்

கோப்பு படம்

கோப்பு படம்

இதில் சில வெடிகள் தவறுதலாக வானத்தை நொக்கி செல்லாமல் பொதுமக்கள் இருந்த பகுதிக்குள் விழுந்து வெடித்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூரில், மாரியம்மன் கோவில் குமாபாபிஷேக விழாவில் வான வெடி தவறி பொதுமக்கள் மீது விழுந்து வெடித்ததில், ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, அதனை கொண்டாடும் விதமாக வான வெடி வெடிக்கப்பட்டது. இதில் சில வெடிகள் தவறுதலாக வானத்தை நொக்கி செல்லாமல் பொதுமக்கள் இருந்த பகுதிக்குள் விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் லலித் (7) மற்றம்  திருச்சியை சேர்ந்த சுரேஷ் (36), பிரியா (21) ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் வாசிக்க: ராமநாதபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ3 லட்சம் கொள்ளை... திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட லலித் என்ற சிறுவன் சுயநினைவு இன்றி  இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மேல் சிகிச்சைக்காக செல்லும் வழியில் லலித் பரிதாபமாக உயிரிழிந்தார். மேலும் சரவணன், பிரியா ஆகிய இருவரும் உடலில் காயம் ஏற்பட்டு பெரம்பலூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- ஆர்.ராஜவேல், செய்தியாளர்

First published:

Tags: Children, Fire accident, Fire crackers, Perambalur