ஹோம் /நியூஸ் /பெரம்பலூர் /

கையும் களவுமாக சிக்கிய பைக், ஆடு திருடும் கும்பல் : தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கையும் களவுமாக சிக்கிய பைக், ஆடு திருடும் கும்பல் : தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

பெரம்பலூரில் திருட்டு கும்பல் கைது

பெரம்பலூரில் திருட்டு கும்பல் கைது

Perambalur | பெரம்பலூரில் பைக் மற்றும் ஆடு திருடும் கும்பலை பொதுமக்கள் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Perambalur, India

  பெரம்பலூர் நகரம் பகுதியில் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆடுகள் திருடு போவது வழக்கமாகி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

  அவர்களில் இதற்கு முன்பு பைக் திருட்டு சம்பவத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளில் இருந்த நபர்களும் இருந்ததால் அவர்களை, துறைமங்கலம் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டி சென்றுள்ளனர். இதனை பார்த்த அவர்கள் தப்பியோடி அருகே இருந்த கறிக்கடையின் உள்ளே சென்றுள்ளனர்.

  அங்கும் துறைமங்கலம் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றதால், கறிக்கடையின் பின்பக்கம் உள்ள வயல் பகுதியில் நுழைந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அவர்களை விரட்டி பிடித்து அதே கறிக்கடை வாசலின் முன்பு தர்ம அடி கொடுத்து, பொதுமக்கள் அமர வைத்திருந்தனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.

  பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தாக்கியதில், திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் லேசான காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் திருட்டு கும்பலை பொதுமக்களிடமிருந்து மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

  மேலும் பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் பாடலூர் அண்ணாநகரை சேர்ந்த சாதிக்(19), ஜான்பாக்ஸ்தீன்(36) சையத்பாபு(20) பாடாலூர் ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்(23) தீபக்(18) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

  Also see... உலகில் இவ்வளவு பேர் வறுமையில் இருக்கிறார்களா?

  மேலும் அவர்கள் மது போதையில் இருந்ததால் இன்று காலை அவர்களிடம் விசாரணை நடத்த போலிசார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருடிய ஆடுகளை அந்த கறிக்கடையில் வைத்து கறியாக்கி விற்பனை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கறிக்கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

  செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arrested, Perambalur, Theif