Home /News /perambalur /

இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறில்லை - சீமான் கருத்து

இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதில் தவறில்லை - சீமான் கருத்து

சீமான்

சீமான்

Perambalur | எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மின் கட்டண உயர்வை எதிர்த்த திமுகவினர் தற்போது, அவர்களே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது ஏற்புடையது அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமான் பெரம்பலூரில் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Perambalur, India
  நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர் அருள்.  இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூர் வந்திருந்தார். குன்னம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த அருளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது செயல்பாடுகளை குறித்து பேசினார். 

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தபோது,  முருகனுக்கு விழா எடுக்கும் நாம் தமிழர் கட்சி விநாயகர் சதுர்த்தியின் போது,  ஏன் விழா எடுப்பதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,  வரலாற்றில் முருகன் மட்டுமே இருக்கிறார். அவர் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் மகன், தமிழ்க்கடவுள், ஆனால் விநாயகர் எப்படி வந்தார் என்பதே தெரியாது” என்று தெரிவித்தார்.

  மேலும் கவிஞர் வைரமுத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர் ஹச்.ராஜா குறித்து கேட்டபோது, “  பாரதிராஜாவின் உடை குறித்து பேசிய, ஹச்.ராஜா பிரதமர் மோடியின் உடையை குறித்து ஏன் பேசவில்லை” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து கேட்டபோது, அவர் நடை பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அனைவரும் உடல் நலனுக்காக நடை பயிற்சி செய்து கொண்டிருக்கின்றனர். 50 ஆண்டுகள் செய்யாததை இந்த நடைபயிற்சி மூலம் அவர் என்ன செய்து விடப் போகிறார் என்று வினவினார்.

  தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கேட்டபோது, ”கருத்துக்கேட்பு கூட்டத்தில் எந்த ஒரு சாமானியரும் பொதுமக்களும் மின்கட்டணத்தை உயர்த்துமாறு சொல்லவில்லை. மாறாக அதிமுக ஆட்சியின் போது கொரோனாவை விட கொடியது இந்த மின் கட்டண உயர்வு என்று பேசிய இதே முதலமைச்சர் தற்பொழுது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு விஷயத்திற்கு எதிராக பேசும் திமுகவினர் ஆளுங்கட்சியாக மாறிய பிறகு அதே செயலை செய்கின்றனர். அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா சொல்வது சரிதான். நீண்ட காலமாக அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார் அதனால் அவர் சொல்வதில் தவறில்லை என்றார்.

  Also read: இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன்.. ஆ.ராசா சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்

  மேலும் இந்துக்கள் குறித்து திமுகவில் துணைப் பொதுச் செயலாளர். ஆ.ராசா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, அவர் பேசியதில் பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றார். தமிழில் வழிபாட்டு முறை இருப்பதுதான் மரபு என்று தெரிவித்த சீமான் சமஸ்கிருத வழிபாட்டு முறையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம் என்றார்.

  Also see... மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு...

  நிகழ்ச்சியின் போது, உயிரிழந்த அருளின் குடும்பத்தின், கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த சீமான் வேப்பூர் வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

  செய்தியாளர்: ஆர் ராஜவேல், பெரம்பலூர்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Electricity bill, Naam Tamilar katchi, Perambalur, Seeman

  அடுத்த செய்தி