Home /News /perambalur /

பெரம்பலூர் அருகே மளிகை கடையில் பிடிப்பட்ட 175 டெட்டனேட்டர்கள்... போலீசார் அதிர்ச்சி!!

பெரம்பலூர் அருகே மளிகை கடையில் பிடிப்பட்ட 175 டெட்டனேட்டர்கள்... போலீசார் அதிர்ச்சி!!

175 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - பெரம்பலூர்

175 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - பெரம்பலூர்

Perambalur | பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் மளிகை கடை உள்ளே 175 டைட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur, India
    பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் இன்று குட்கா விற்பனையை  தடுக்கும் பொருட்டு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது, 175 டெட்டனேட்டர்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த டெட்டனேட்டர்களை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, மகேந்திரனின் மகன் கோபிநாத் என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான அதே கவுல்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வேலை செய்து வருவதாகவும், அங்கு பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள கெட்ட டெட்டனேட்டர்களை எடுத்து வந்து கடையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    Also see... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...



    இருப்பினும் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மகேந்திரன் மற்றும் கோபிநாத் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளார்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Independence day, Perambalur

    அடுத்த செய்தி