கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமா?

கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.

கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்: ஹீரோ யார் தெரியுமா?
பரியேறும் பெருமாள் படத்தின் போஸ்டர்
  • News18
  • Last Updated: March 21, 2019, 8:23 AM IST
  • Share this:
கதிர், ஆனந்தி நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன் நாயகனாக அறிமுகமாகிறார்.

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம்.

இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்தச் செய்தியை அறிந்த, தமிழ், கன்னட முன்னணி ஹீரோக்கள் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)


இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.

இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்று வருகிறார்.

கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள்.விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.

Also See..

First published: March 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories