விடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்?
விடைத்தாள் திருத்தம் குறித்து ஆசிரியர்களுக்கு அரசு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தம் குறித்து ஆசிரியர்களுக்கு அரசு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- News18 Tamil
- Last Updated: May 25, 2020, 11:18 AM IST
கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஈடுபடுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும் எனக் கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்ககூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. Also see...
இது குறித்து சில விதிமுறைகளை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும் எனக் கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்ககூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.