ஹோம் /நியூஸ் /நீலகிரி /

தோட்டத்திற்கு சென்ற முதியவரை மிதித்தே கொன்ற காட்டுயானை.. கூடலூரில் அதிர்ச்சி சம்பவம்..

தோட்டத்திற்கு சென்ற முதியவரை மிதித்தே கொன்ற காட்டுயானை.. கூடலூரில் அதிர்ச்சி சம்பவம்..

முதியவரை மிதித்தே கொன்ற காட்டுயானை

முதியவரை மிதித்தே கொன்ற காட்டுயானை

Elephant Attack : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஓவேலி டெல்ஹவுஸ் பகுதியில் மஞ்சசேரி பிளாண்டேஷன் தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிவனான்டி(65) என்பவர் வீட்டில் அருகே உள்ள தோட்டத்தில் விறகு எடுக்க சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டுயானை இவரை திடீரென தாக்கியது. யானையால் தாக்கப்பட்ட சிவனான்டி சத்தம் போட்டார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது யானை அவரை மிதித்து நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபதாக உயிரிழந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வனத்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் அரசு அதிகாரிகள் வனத்துறை வாகனத்தில் சிவனான்டியின் சடலத்தை ஏற்றி செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி மக்கள் வனத்துறை வாகனத்தை முற்றுகையிட்டு சுமார் 3 மணி நேரமாக வாகனத்தை சிறைபிடித்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள். வனத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் முடிவு பெறாத நிலையில் வனத்துறை அதிகாரி கருப்பையா சம்பவ இடத்திற்கு சென்றார். மேலும் இப்பகுதியில் பலரை யானை தாக்கியுள்ளதாக கூறி வனத்துறையை கண்டித்து பகுதி மக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் ஒரு வழியாக இப்பகுதி மக்களுக்கு வசிப்பிடத்திற்கு யானை வராத அளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு வேலை, அரசு அறிவித்துள்ள பணம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்கும் என கூறியதுயடுத்து பொதுமக்கள் இறந்தவரின்  உடலை எடுக்க சம்மதித்தனர்.

பின்னர் சிவனான்டியின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி

First published:

Tags: Local News, Nilgiris