ஹோம் /நியூஸ் /நீலகிரி /

வளர்ப்பு யானைகளுடன் சண்டைக்கு வந்த காட்டு யானை.. நடுவில் சிக்கி படுகாயமடைந்த பாகன்!

வளர்ப்பு யானைகளுடன் சண்டைக்கு வந்த காட்டு யானை.. நடுவில் சிக்கி படுகாயமடைந்த பாகன்!

வளர்ப்பு யானையின் பாகனை தாக்கிய மதம் பிடித்த காட்டு யானை

வளர்ப்பு யானையின் பாகனை தாக்கிய மதம் பிடித்த காட்டு யானை

Ooty Elephant attack | நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் சண்டைக்கு வந்த மதம் பிடித்த காட்டு யானை தாக்கி யானை பாகன் படுகாயமடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் சண்டைக்கு வந்த மதம் பிடித்த காட்டு யானை தாக்கி யானை பாகன் படுகாயமடைந்தார்.

முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானை முகாமில் இருந்து வசீம், இந்தர், சுஜய் ஆகிய 3 வளர்ப்பு யானைகள் இன்று காலை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் கொண்டு செல்லபட்டன.

அப்போது மதம் பிடித்த காட்டு யானை ஒன்று வளர்ப்பு யானைகளை தாக்க வந்த நிலையில் அதனை சக யானை பாகன்கள் விரட்டும் பணியில்  ஈடுபட்டனர். அப்போது இந்தர் யானையின் பாகன் மாறன் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

Also see... காட்டுக்குள் அம்மன் கோயில்.. திடீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள்.. உதகையில் பரபரப்பு!

பின்பு அவருக்கு கூடலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார்.

செய்தியாளர்: அய்யாசாமி, ஊட்டி

First published:

Tags: Elephant, Nilgiris