ஹோம் /நியூஸ் /நீலகிரி /

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி.. நீலகிரியில் உள்ள பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி.. நீலகிரியில் உள்ள பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் திடீரென மர்மமான முறையில் இறந்தன. வனத்துறையினர் மேற்கொண்ட பிரேத மாதிரிகளின் பரிசோதனையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் காட்டுப்பன்றிகள் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதிக்கப்பட்டதோடு அண்டை மாநிலங்களிலிருந்து பன்றிகள் கொண்டு வரவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்  காரணமாக கூடலூர் அருகே தொரப்பள்ளியில் மாவட்ட. கால்நடை துறையின்  இணை இயக்குநர் தலைமையில் பன்றி பண்ணைகளில் துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பண்ணைகளில் உள்ள பன்றிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன பண்ணையாளர்கள் எதுபோன்ற நடவடிக்கைகளை கையாள வேண்டும். பண்ணைகளைச் சுற்றி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள தடுப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் திடீரென இறந்தால் துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் பன்றிகள் பராமரிப்பில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காத வளர்ப்பு பன்றி பண்ணையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ஐய்யாசாமி ( நீலகிரி)

First published:

Tags: Local News, Nilgiris, Swine Flu, Swine flu symptoms, Tamil News