ஹோம் /நியூஸ் /நீலகிரி /

உதகையில் திடீரென வீடுகளில் ஏற்படும் விரிசல்.. கிராம மக்கள் அச்சம்... ஆய்வில் இறங்கிய புவியியல்துறை!

உதகையில் திடீரென வீடுகளில் ஏற்படும் விரிசல்.. கிராம மக்கள் அச்சம்... ஆய்வில் இறங்கிய புவியியல்துறை!

ஊட்டி வீடுகள் விரிசல்

ஊட்டி வீடுகள் விரிசல்

உதகை அருகே உள்ள கோக்குடல் கிராமத்தில் சாலை மற்றும் 8க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென ஏற்பட்ட விரிசலால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் புவியியல் துறையினர் முழு ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty), India

  உதகை அருகே கோக்குடல் என்னும் கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாலையிலும் கிராமத்தில் உள்ள வீடுகளிலும் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்த நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

  இது குறித்து புவியியல் துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் மலைப்பகுதியில் இருந்த நீரோடைகள் மூலம் நிலத்தடியில் நீர் சென்று கொண்டிருப்பதால் இந்த விரிசல் ஏற்ப்பட்டுள்ளது என தெரிவித்து மண் பரிசோதனை செய்த மண் மாதிரிகள் சேகரித்து சென்றுள்ளனர்.

  Also see... ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளைமுதல் ரூ.1,000 - ஆட்சியர் உத்தரவு

  இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், " திடீரென வீடுகளில் ஏற்பட்ட விரிசலால் அச்சமடைந்ததாகவும் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதுவரை இந்த கிராமத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தற்பொழுது நடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் , நாளுக்கு நாள் விரிசல் அதிகரிப்பதாகவும் புவியியல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இதை ஆய்வு செய்து நில அதிர்வா, நிலம் வெடிப்பா அல்லது நில நடுக்கம் ஏற்ப்பட்டதா என்பதை உறுதி செய்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Earthquake, Ooty