ஹோம் /நியூஸ் /நீலகிரி /

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்... அமைச்சர், கலெக்டர் தப்பினர்... சினிமா காட்சிபோல் திக் திக் நிமிடங்கள்...

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்... அமைச்சர், கலெக்டர் தப்பினர்... சினிமா காட்சிபோல் திக் திக் நிமிடங்கள்...

விபத்தில் சிக்கிய அமைச்சர் கார்

விபத்தில் சிக்கிய அமைச்சர் கார்

Ooty Accident | சுதாரித்து கொண்ட ஓட்டுனர் பிக்கப் வாகனத்தின் பிரேக்கை பிடித்ததால் நூலிழையில் வாகனம் நின்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty), India

  ஊட்டி அருகே  வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தபோது வாகனம் நிலைதடுமாறியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

  ஊட்டி அடுத்த பிங்கர்போஸ்ட் அருகே பட்பயர் பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

  பின்னர் இருவரும் பிக்கப் வாகனத்தில் ஏறி வந்தனர். அப்போது வளைவில் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறியது. இதனால் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருந்தது.

  இதையும் படிங்க : குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ஏலம் தான்: புதிய ரூல்ஸை கொண்டு வர போக்குவரத்து காவல்துறை திட்டம்

  இதையடுத்து, சுதாரித்து கொண்ட ஓட்டுனர் பிக்கப் வாகனத்தின் பிரேக்கை பிடித்ததால் நூலிழையில் வாகனம் நின்றது. இதையடுத்து வாகனத்தில் இருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனே பிரேக் போட்டதால் அனைவரும் அதிஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பினர்.

  இதனைத்தொடர்ந்து உடனடியாக அமைச்சர் மற்றும் கலெக்டரை வாகனத்திலிருந்து பத்திரமாக கிழே இறக்கிய அதிகாரிகள் பின்னர் அவர்களை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சினிமாவில் வரும் காட்சிகளைபோல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி

  Published by:Karthi K
  First published:

  Tags: Accident, Minister, Nilgiris, Ooty Accident