Home /News /nilgiris /

கொட்டும் கனமழை.. சாலையில் விழுந்த ராட்சத மரங்கள், மின்கம்பங்கள் - ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

கொட்டும் கனமழை.. சாலையில் விழுந்த ராட்சத மரங்கள், மின்கம்பங்கள் - ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த ராட்சத மரம்

சாலையில் விழுந்த ராட்சத மரம்

OOTY : நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால் ஏராளமான இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீலகிரி மாவட்டம்  மேல் பவானி பகுதியில்  கடந்த 24 மணி நேரத்தில் 22 செ.மீ மழை பதிவாகி உள்ளது. உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மழையால்  நாள்தோறும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று, உதகையில் இருந்து எப்பநாடு பாரஸ்ட் கேட், கவரட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல கூடிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சாலையில் விழுந்த மின் கம்பம்


    அதே போல உதகை வண்ணாரப்பேட்டை சாலையிலும் ராட்சத மரம் விழுந்து, மின்கம்பிகள் சேதமடைந்தன. சம்ப இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும்  மின்வாரிய ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை விழுந்த மரங்களால் 10 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

    Must Read : பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

    இதனிடையே மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம் என தீயணைப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஐயாசாமி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Heavy rain, Nilgiris, Ooty, Traffic

    அடுத்த செய்தி