ஹோம் /நியூஸ் /நீலகிரி /

தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி... உதகையில் பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள்..

தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி... உதகையில் பீதியில் உறைந்த சுற்றுலா பயணிகள்..

தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி

தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி

Tiger Roaming : உதகை அருகே சோலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலியை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mettupalayam, India

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. அதேபோல் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியில் செல்லக் கூடிய சாலைகளாக உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை அருகே எச்பிஎப் பகுதியில் புலி ஒன்று பசுமாட்டை வேட்டையாடிக் கொன்றது. இதை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறை கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர் அதன் பின்பு புலி நடமாட்டம் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், உதகை அருகே சோலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலியை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பெரிய புலி ஒன்று சாலையை கடந்து தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது பின்பு தேயிலை தோட்டத்தில் ஓர் இடத்தில் நின்று வாகனத்தை அண்ணாந்து பார்த்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் புலியை நடுநடுங்கி வீடியோ  பதிவு செய்துள்ளனர் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி

First published:

Tags: Local News, Nilgiris, Ooty, Tiger