முகப்பு /செய்தி /நீலகிரி / கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை..பீதியில் மக்கள்

கூடலூரில் சுற்றித்திரியும் புலி.. வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை..பீதியில் மக்கள்

புலி நடமாட்டத்தை கண்காணிக்க நடவெடிக்கை.

புலி நடமாட்டத்தை கண்காணிக்க நடவெடிக்கை.

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக  புலி நடமாட்டம் மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம்  எச்சரிக்கை பொதுமக்கள் பீதி

  • Last Updated :
  • Tamil Nadu, India

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக  புலி நடமாடி வருகிறது. எனவே, மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணுவயல், அம்பல மூல, சேமுண்டி, கொரவயல்,  போஸ்பரா போன்ற பகுதிகளில் கடந்த சில  தினங்களாக புலி நடமாட்டம் உள்ளதாக   வனத்துறைக்கு விவசாயிகள்,ஓட்டுனர்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. பொதுமக்கள் கொடுத்த  தகவலின் அடிப்படையில் அந்தந்த பகுதியில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு   கேமராக்களை வனத்துறையினர் கண்காணித்து  வருகின்றனர்.

மேலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று ஒலிப்பெருக்கிகள் மூலம் புலி நடமாட்டம் குறித்து அறிவித்தனர். அறிவிப்பின்போது புலி மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் தென்படுவதால்  மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து யாரும் வெளியில் வர வேண்டாம்  என்று ஒலிபெருக்கி மூலம் கிராமங்களில்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : ரூ 9.30 கோடி மதிப்பில் டீசலில் இயங்கும் புதிய நீராவி மலை ரயில் எஞ்சின்.. சோதனை ஓட்டம் வெற்றி..!

வனத்துறையினர் புலியின் கால் தடங்கள் இருக்கின்றதா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நம்மிடம் கூறுகையில் நாங்கள் அன்றாடம் கூலி வேலை பார்த்து வருகிறோம். வீட்டிற்கு வரும் பொழுது எட்டு மணி ஒன்பது மணி ஆகிவிடும் .நாங்கள் வன மிருகங்கள் பற்றிய தகவல் கொடுத்தாலும் அங்கே சொல்லுங்கள், இங்கே சொல்லுங்கள்; அவரிடம் சொல்லுங்கள், புலிகள் சரணாலயத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள்.

ஒலிபெருக்கி மூலம் ஊருக்குள் இருக்கும் எங்களை  இரவு  நேரங்களில்  வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிப்பதை விட்டுவிட்டு வனத்துக்குள் இருந்து ஊருக்குள் புகுந்து வரும் வன மிருகங்களை தடுப்பதற்கான வழியை வனத்துறையினர் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ஐயாசாமி- நீலகிரி

First published:

Tags: Nilgiris, Tiger