Home /News /nilgiris /

மலைப்பாதையில் தவழ்ந்து செல்லும் மேகங்கள்.. சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளித்த உதகை

மலைப்பாதையில் தவழ்ந்து செல்லும் மேகங்கள்.. சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளித்த உதகை

மேகங்கள்

மேகங்கள்

Udhagamandalam | குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் அதிகாலை வேலை மற்றும் மாலை வேளையில் இது போன்ற மோகங்களின் ரம்மியமான காட்சிகளை காண முடியும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பச்சை பசேலென காட்சி அளிக்கும் வனங்கள் எப்போதுமே கண்களை கொள்ளை கொள்ளும் அழகாய் காட்சியளிக்கும். இந்த மலைப்பாதையில் அவ்வப்போது மேகங்கள் தவழ்ந்து செல்வது அனைவரையும் ரசிக்க வைக்கும்.

    இன்று இந்த மலைப்பாதையில் இருந்து சமவெளி பகுதியை மேகம் போர்த்தியது கண்களை கவர்ந்தது. பசுமையான மலைகளுக்கிடையில் சமவெளி பள்ளத்தாக்கு முழுவதும் மேகம் சூழ்ந்து மலைகளை தொட்டு சென்ற காட்சியை மலைப்பாதையில் பயணித்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

    மலைப்பாதையில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மேகங்கள் தவழ்ந்து செல்லும் இந்த காட்சியைக் கண்டு ரசித்து வியப்படைந்தனர். சிலர் செல்வியும் எடுத்து மகிழ்ந்தனர்.



    Also see... தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை...

    குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் அதிகாலை வேலை மற்றும் மாலை வேளையில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் மேகங்களும் மலைகளைத் தொட்டுச் செல்லும் இது போன்ற ரம்மியமான காட்சியை  நாள்தோறும் காணலாம்.

    செய்தியாளர்: ஐயாசாமி, குன்னூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nilgiris, Ooty

    அடுத்த செய்தி