முகப்பு /செய்தி /நீலகிரி / பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை... கோத்தகிரியில் பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

பயமுறுத்திய ஒற்றை காட்டு யானை... கோத்தகிரியில் பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Nilgiri News : கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியிகளான மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான காபி பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை உண்பதற்காக கோத்தகிரி,  மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது யானைகள் கூட்டம் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சபானை பகுதியில் கூட்டத்தில் இருந்து பிரிந்த  ஒற்றை காட்டு  யானை நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சாலை ஓரத்தில் சுற்றியதோடு வாகனங்களையும் வழிமறித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நீண்ட நேரம் சாலையில் நின்ற ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பின்னர் ஒற்றை காட்டு யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள்  சென்றது. இதனால் நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள் அதன் பின் வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.  மேலும் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகப்படியான  வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருவதால் பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும்போது மிகவும் கவனமுடன்  இருக்கவேண்டுமென வனத்துறையினர்  அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி

First published:

Tags: Local News, Nilgiris