Home /News /nilgiris /

ஊட்டி மலைப்பாதையில் ஐடி ஊழியர்கள் சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து.. இளம்பெண் உயிரிழப்பு

ஊட்டி மலைப்பாதையில் ஐடி ஊழியர்கள் சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து.. இளம்பெண் உயிரிழப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் இருந்து ஊட்டிக்கு ஐடி ஊழியர்கள் சுற்றுலா சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மென்பொறியாளர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

    சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல் நிறுவனத்தை சார்ந்த 18 பேர் வார இறுதி விடுமுறை காரணமாக உதகையை சுற்றி பார்க்க டெம்போ டிராவலர் ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர்.

    அதன்படி, இன்று உதகையை சுற்றி பர்த்து விட்ட அவர்கள் கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க சென்றுள்ளனர்.

    அப்போது, 15-வது கொண்டைஊசி வளைவு பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும்,  வாகனத்தில் பயணித்த 14 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உதகை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ooty

    அடுத்த செய்தி