முகப்பு /செய்தி /நீலகிரி / கனமழை எதிரொலி : குன்னூர், கோத்தகிரி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

கனமழை எதிரொலி : குன்னூர், கோத்தகிரி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

Schools Leave | கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coonoor, India

கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் கோத்தகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் உதகை, குன்னூர், கோத்தகிரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குன்னூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் தேங்கி நின்று வாகனங்கள் அதில் ஊர்ந்து சென்றன. நகரப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக மண்சரிவுகள்  ஏற்பட்டன. அந்த இடத்தில் இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு பாதிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன.

கனமழை காரணமாக குன்னூர் கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் துறை சார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

Also see... தமிழக அமைச்சராக இன்று பதவியேற்கிறார் உதயநிதி

இதனிடையே கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: அய்யாசாமி, ஊட்டி

First published:

Tags: Coonoor, Nilgiris, School Leave