ஹோம் /நியூஸ் /நீலகிரி /

பி.டி டீச்சர் மாற்றம்.. ஊட்டியில் மாணவர்கள் போராட்டம்..

பி.டி டீச்சர் மாற்றம்.. ஊட்டியில் மாணவர்கள் போராட்டம்..

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

பள்ளி மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதகை அருகே ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

  மசினகுடியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்  உடற்பயிற்சி ஆசிரியராக சிவாஜி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அவர் பள்ளி மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் ஊக்கபடுத்தி மாவட்ட அளவில் வெற்றி பெற செய்ததுடன் கிரிக்கெட் போட்டியிலும் 3 மாணவர்கள் தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு ஏற்படுத்தினார்.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்.அப்போது மாணவர்களும் பெற்றோர்களும் உடற்பயிற்சி ஆசிரியர் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தனர்.

  Read More : ஓட ஓட விரட்டி காட்டுபன்றியை வேட்டையாடிய புலி.. நேரில் பார்த்து நடுங்கிய சுற்றுலா பயணிகள்..!

  இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று மாலை உடற்பயிற்சி ஆசிரியர் சிவாஜியை ஏற்கனவே பணியாற்றிய சோலூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனை அறிந்த பள்ளி மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Ooty