ஹோம் /நியூஸ் /நீலகிரி /

நாட்டையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து... முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நினைவுநாள் இன்று!

நாட்டையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து... முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நினைவுநாள் இன்று!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

General Bipin Rawat | நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நாட்டையே உலுக்கிய குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடத்து இன்றுடன் ஓராண்டாகிறது. இதே டிசம்பர் 8-ம் தேதி உதகை வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், மோசமான வானிலையால் நஞ்சப்பாசத்திரம் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர்.

ஓராண்டுகள் கடந்தும் இன்று வரை இந்த சம்பவம் நடந்த இடமான குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்களிடையே கண்களிலும் இதயத்திலும் நீங்காமல் உள்ளது. டிசம்பர் 8 2021 ஆம் ஆண்டு சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 13 பேர் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை புரிந்தனர்.

கடும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டு குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த ஒரு சில மணித்துளிகளில் இச்சம்பவம் தீயாய் பரவியது. அதே நேரம் ஹெலிகாப்டர் விழுந்து சிதறி தீயும் கொழுந்துவிட்டு எரிந்தது.

Also see...  நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு..

அப்பகுதியில் இருந்த மக்கள் உயிர்போகும் அச்சத்தோடு காவலர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் கொழுந்து விட்டு எரியும் பொழுது கிராம மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்த பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து அணைக்க முயற்சி செய்தனர்.

நேரம் செல்ல செல்ல தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.  உடனடியாக ராணுவத்தினர்  சம்பவ இடத்திற்கு வந்தனர். நஞ்சப்பசத்திரம் ஊர் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், ராணுவத்தினர் என அனைவரும் போராடி தீயை அணைத்தனர்.

ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய பகுதிகளில் 13 பேர் ஒவ்வொரு இடங்களில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட போது அதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட  13 பேர் பயணித்தது தெரியவந்தது.

விபத்தில்  13 பேரையும் தீக்காயங்களுடன் மீட்ட ராணுவத்தினர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அப்போது ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி 13 பேரும் உயிரிழந்தனர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது நாட்டையும் நாட்டு மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி கண்ணீரை வரவழைத்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கிராம பகுதி மக்கள் இன்று வரை இந்த சம்பவம் தங்களுக்கு நீங்கா நினைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

Also see... Election Live: குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை!

இந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரையும் இந்த சம்பவம் துயரப்படுத்தியது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இந்த பகுதியில் அவரின் நினைவாக ராணுவத்தினர் பல உதவிகளை தங்களுக்கு செய்துள்ளதாகவும் தெரிவித்த கிராமப் பகுதி மக்கள் இந்தப் பகுதியில் பிபின் ராவத் நினைவாக அவருக்கு அடையாளமாக நினைவுத்தூண் வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதேபோல் தங்கள் கிராமப் பகுதிக்கு வளர்ச்சிப் பணிக்காக மாநில அரசால் ஒதுக்கப்பட்ட 2.40 கோடி நிதி தொகை இதுவரை கிடைக்காததால் நடைபாதை முதல் வசிக்கும் வீடுகள் வரை அடிப்படை வசதி இல்லாமல் உள்ளதாக வேதனை தெரிவித்ததோடு கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் முப்படை தளபதி பிபின் ராவத்திக்கும் அவருடன் பயணித்து உயிரிழந்தவர்களுக்கும் இந்த நாளில் கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துவதை  மறக்க முடியாத நாளென தெரிவித்தனர்.

First published:

Tags: Army Chief General Bipin Rawat, Ooty