Home /News /nilgiris /

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை... வனத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை...

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை... வனத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை...

வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆலோசனை - உதகை

வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆலோசனை - உதகை

Udhagamandalam | நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உதகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மழை பதிவு குறைவாக உள்ளது. ஆனால் நாளை மிக கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. அதனையடுத்து உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதில் கன மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன், கன மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட 2 தேசிய பேரிடர் மீட்பு படைகள் மற்றும் ஒரு மாநில பேரிடர் மீட்பு படை வரவழைக்கபட்டுள்ளதகவும், 283 இடங்கள் பாதிக்கபடும் இடங்களாக கண்டறியபட்டுள்ளதாகவும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் 353 அபாயகரமான மரங்கள் வெட்டபட்டுள்ளதாகவும் இன்னும் 308 மரங்கள் வெட்டபடும் என்ற அவர் தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் விதமாக சர்வதேச ராம்சர் திட்டத்தில்  சேர்க்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும்ட்தெரிவித்தார்.

    Also see... கேரளாவில் தொடரும் கனமழை...பம்பா நதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை...

    அதில் கோடிய க ரை ஏற்கனவே சர்வதேச ராம்சர் திட்டத்தில் சேர்க்கபட்ட நிலையில் தற்போது பள்ளிகரனை, பிச்சாவரம், கரிகிலி ஆகிய 3 இடங்கள் இடங்களும் சேர்க்கபட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகஸ் 15-ந்தேதிக்குள் மேலும் 5 இடங்கள் ராம்சர் திட்டத்தில் சேர்க்கபடும் என எதிர் பார்க்கபடுவதாகவும் தெரிவித்தார்.

    செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood alert, Nilgiris, Red Alert

    அடுத்த செய்தி