ஹோம் /நியூஸ் /நீலகிரி /

ஆட்சியை கலைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன தகுதி இருக்கிறது - ராகுல் காந்தி காட்டம்

ஆட்சியை கலைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன தகுதி இருக்கிறது - ராகுல் காந்தி காட்டம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியை கலைக்க முயல்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது ராகுல் காந்தி கேள்வி

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்றது. கோழிபாலம் பகுதியில் துவங்கிய பாதயாத்திரை கூடலூர் சுங்கம் பகுதியில் நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி பேசினார்.

அப்போது ”என் சகோதரி சிம்லாவில் ஒரு வீட்டை கட்டி இருக்கின்றார், அது பற்றி அடிக்கடி பேசுவார் எனக்கூறிய அவர், இன்று அவரிடம்  கூடலூர் வீடு கட்டுவதற்கு அழகான இடம் என்று சொன்னேன் என தெரிவித்தார். கூடலூர் பலவகைகளில் அழகான இடம் என தெரிவித்த அவர், அழகான மலைகள், கால சூழலும் இங்கு கூடுதல் அழகை கொடுக்கின்ற. இந்த ஊர்  அழகாக இருக்க காரணம் மூன்று மொழிகள், மூன்று  கலாச்சாரங்கள், மூன்று பண்பாட்டுகளை இணைக்கும் இடமாக  இருக்கின்றது” எனவும் தெரிவித்தார்.

மேலும்,” ராகுல் காந்தி பேசும் போது பள்ளிவாசலில் தொழுகை முன்னிட்டு பாங்கு வாசித்ததால் பேச்சை நிறுத்தினார். பாங்கு வாசித்து  முடிந்த சிறிது இடைவெளிக்கு பின்னர் பேச்சை தொடர்ந்தார். அப்போது தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் இங்கு இணைந்து , 3 மொழிகளும் மதிக்கப்படும் இடமாக கூடலூர் இருக்கின்றது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இணைந்து, அனைவரும் பாசத்துடன் இருக்கின்றனர் தெரிவித்தார்.

பாரத் ஜோடோ யாத்திரை:

பாரத் ஜோடோ யாத்திரை எதற்காக நடத்தபபடுகின்றதோ, அத்தனையும் இங்கு இருக்கின்றது என தெரிவித்த அவர், ஒற்றுமையை பற்றியும் எப்படி ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஊரில்  இருந்து பிறருக்கு கொண்டு செல்கின்றோம்” எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ இங்கு யாரும் கோபமோ, வெறுப்போ காட்டவில்லை, யாரும் யாரையும் அவமதிப்பதை பார்க்கவில்லை என தெரிவித்த அவர், இந்த இடத்தில் தமிழ் பேசக்கூடாது என்றோ, மலையாளம் பேச வேண்டும், ஆங்கிலம் பேச வேண்டும் என்றோ  நிர்பந்திக்கவில்லை இதுதான் இந்தியா என்பது என்னுடைய எண்ணம் என தெரிவித்தார்.

மொழியையோ அவமதிப்பதை ஏற்க மாட்டோம்:

சில அமைப்புகள் இந்த அமைதியை குலைக்க பார்க்கின்றனர். இங்கே வெறுப்பு தன்மையை வேற்றுமையை விதைக்க பார்க்கின்றனர். அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்தியா என்கிற நதியில் அமைதியின்மை ஏற்படுத்துவதை அனுமதிக்க கூடாது என தெரிவித்த அவர், ஒரு மாநிலத்தையோ, மொழியையோ அவமதிப்பதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

ஆட்சியை கலைக்க என்ன தகுதி இருக்கு:

இங்கு இருக்கும் கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் தலையிடுகின்றனர். ஆட்சியை கலைக்க முயல்கின்றனர். பாஜக ,ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட  ஆட்சியை கலைக்க முயல்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது என காட்டமாக பேசினார்.

மேலும் ஜி.எஸ்.டியில் மாநில அரசுகள் பங்குதாரர்கள், உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி தொகை மாநிலங்களுக்கு தர வேண்டும் என தெரிவித்த அவர்,ஓரே மொழி, ஒரே நாடு என்று பா.ஜ.க சொல்கின்றது, ஆனால் நமக்கு தேவை ஒற்றுமை, இங்கே ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை சிலர்  விரும்பவில்லை. ஒவ்வொரு மொழியும், பண்பாடும் மதிக்கப்பட வேண்டும். காப்பாற்ற்பட வேண்டும். சமீபகாலமாக நாட்டின் நிலையை கவனித்தால் , பா.ஜ.க செய்யும்  அனைத்து காரியங்களும் தெரியும். இந்தியா மிகப்பெரிய அளவில் வேலை இல்லாமையை சந்தித்து வருகின்றது. விலைவாசி உயர்ந்துள்ளது, விவசயிகள், தொழில் முனைவோர் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

Also see... கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்...

மேலும், “ இன்று சிறு, குறுதொழில் முனைவோரை சந்தித்தாகவும்,  எலக்ட்ரிக் கார், ஸ்கூட்டர், மருந்து வகைகளை செய்யும் தொழில் முனைவோராகிய அவர்கள், இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த ஓவ்வொரு தொழில்  முனைவோரும் ஜிஎஸ்டி பேரழிவை எற்படுத்தி இருப்பதாகவும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை பேரிடரை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கின்றனர் என தெரிவித்தார்.

பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்றவை மக்களின் சட்டையில் இருந்து பணத்தை எடுப்பதுபோல என தெரிவித்த அவர், சமையல் எரிவாயு, பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து இருக்கின்றது எனவும், இதற்கு காரணம் தவறான பொருளாதார நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

நமது பையில் இருக்கும் பணத்தை எடுத்து பிறருக்கு கொடுக்கிற செயல் அது என தெரிவித்த அவர், ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏழை மக்கள் அதிகமாக பணம் செலவழிக்க கூடிய இந்தியாவாக இருக்கிறது. இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செய்திகள் பாரத் ஜோடா பயணத்தில் சொல்லப்படுகின்றது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் கட்சியினுடைய எம்.பி ஜெயக்குமார் மொழி பெயர்த்தார். பல இடங்களில் ராகுல் காந்தியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மொழிபெயர்ப்பின் போது  ஜெயக்குமார் தடுமாறினார் என்பது குறிப்பிடதக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, Nilgiris, Rahul gandhi, RSS