Home /News /nilgiris /

முறுக்கு மீசையுடன் கோர்ட்டுக்கு வந்த காவலர்... மீசையை வெட்டச் சொன்ன நீதிபதி!

முறுக்கு மீசையுடன் கோர்ட்டுக்கு வந்த காவலர்... மீசையை வெட்டச் சொன்ன நீதிபதி!

ராஜேஷ் கண்ணா

ராஜேஷ் கண்ணா

Nilgiris : மீசையை முறையாக வெட்டாமல் நீதிமன்றத்துக்கு வந்த காவலரை நீதிபதி கண்டித்த நிலையில், காவலர் மீசையின் அளவை குறைத்து வந்து நீதிபதியிடம் காண்பித்தார்.

    நீலகிரியில் மீசையை முறையாக வெட்டாமல் நீதிமன்றத்துக்கு வந்த காவலரை நீதிபதி கண்டித்து, மீசை முறையாக சவரம் செய்துவிட்டு நீதிமன்றத்துக்கு வரும்படி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து. அந்த காவலர் மீசையின் அளவை குறைத்து வந்து நீதிபதியிடம் காண்பித்தார்.

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த அம்பலமூலா காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல்நிலைய வழக்கு விசாரணை தொடர்பாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தார்.

    அப்போது, ராஜேஷ் கண்ணாவின் சிங்கம் திரைப்படம் சூர்யா ஸ்டைலில் இருந்த அந்த பெரிய மீசையைப் பார்த்து கோபமடைந்த நீதிபதி முருகன், மீசையை உடனடியாக கத்திரித்துவிட்டு வந்து தன்னிடம் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ராஜேஷ் கண்ணா


    Must Read : ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

    அதனைத் தொடர்ந்து, காவலர் ராஜேஷ் கண்ணா, நீதிமன்றத்தில் இருந்து வேகமாக வெளியே சென்று, அருகில் இருந்த சலூனில் தனது மீசையை கத்தரித்து, அதன் அளவைக் குறைத்து, பின்னர் மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜரானார்.

    செய்தியாளர் - ஐயாசாமி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Court, Nilgiris, Police

    அடுத்த செய்தி