Home /News /nilgiris /

நீலகிரியில் 198 வகையான அரியவகை பறவை இனங்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி அசத்தும் புகைப்பட கலைஞர்..

நீலகிரியில் 198 வகையான அரியவகை பறவை இனங்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி அசத்தும் புகைப்பட கலைஞர்..

நீலகிரியில் உள்ள அரியவகை பறவைகளை ஆவணப்படுத்தும் புகைப்பட கலைஞர்..

நீலகிரியில் உள்ள அரியவகை பறவைகளை ஆவணப்படுத்தும் புகைப்பட கலைஞர்..

நீலகிரியில் 198 வகையான பறவை இனங்களை புகைப்படம், ஒளிப்பதிவு செய்து அசத்தியுள்ள புகைப்படக் கலைஞர்

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரியவகை பறவைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் புகைப்பட கலைஞர் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது கேமரா மூலம் பிடிக்கப்பட்ட பறவைகளின் அழகியலை இந்தத் தொகுப்பில் காணலாம்.

    நீலகிரி மாவட்டம், 67 சதவீத வனப்பகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய உயிர்ச் சூழல் மண்டலமாக திகழ்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருப்பது மட்டுமன்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவையினங்களும் வந்துசெல்லும் இயற்கை எழில்கொஞ்சும் சரணாலயமாகவும் விளங்குகிறது.

    இந்த பறவை இனங்கள் அனைத்தும் உதகையின் காலநிலையில், அதனுடைய இருப்பிடங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை எப்படி அமைத்துக் கொள்கின்றன என்பதை துல்லியமாக படம் பிடித்துள்ளார் புகைப்படக் கலைஞர் மதிமாறன்.



    Sun Bird, Nilgiri Flycatcher, King Fisher, Blue Robin உள்ளிட்ட பல்வேறு இனங்களின் 198 பறவைகளை ஆவணப்படுத்தி, அதன் அழகியலை உலகறியச் செய்துள்ளார்.

    அரியவகை பறவைகள் குறித்து ஆவணப் படங்கள் எடுப்பதன் மூலம், பள்ளிக் குழந்தைகளுக்கு பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறார் மதிமாறன்.

    நீலகிரியில் உள்ள பழங்குடியினருக்கு கடவுள் கொடுத்த பரிசாக இந்த பறவைகள் உள்ளதாக. மதிமாறன் தெரிவிக்கிறார். அவர்களோடு மிக நெருக்கமாக பறவைகள் வாழ்வதாகவும், உலகில் உள்ள அனைத்து வண்ணங்களையும் தன்மேல் பூசிக்கொண்டு இந்தப் பறவைகள் வாழ்வதாகவும் கூறுகிறார்.



    அத்துடன், காடுகளில் பறவைகள் எழுப்பும் ஒலியை கேட்கும் போது, உற்சாகம் பொங்கி, கவலைகள் மறைந்து போகும் என்று சிலாகிக்கிறார் இந்த பறவைகளின் ஆர்வலர்.


    பூமியில் காடுகள் செழிக்கவும், மனிதர்கள் வாழவும் பறவைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதே நிதர்சனம்...

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Birds, Ooty

    அடுத்த செய்தி