Home /News /nilgiris /

உதகை சிம்ஸ் பூங்காவில் காய்த்து குலுங்கும் நூற்றாண்டு பழமையான பெர்மிசன் மரங்கள்!

உதகை சிம்ஸ் பூங்காவில் காய்த்து குலுங்கும் நூற்றாண்டு பழமையான பெர்மிசன் மரங்கள்!

உதகை சிம்ஸ் பூங்கா

உதகை சிம்ஸ் பூங்கா

Nilgiris District : பெர்சிமன் (Persimmon) பழம் மற்ற பழங்களைப் போல நேரடியாக சாப்பிட முடியாது. மரத்திலிருந்து பறித்து ஒருநாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து கழுவி தோலை உறித்து சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coonoor, India
    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு குன்னூரில் பயிரிடப்பட்ட பெர்சிமன் மரங்களில் அதிகப்படியாக பழங்கள் காய்த்துள்ளன.

    தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு சொந்தமான குன்னூர் பழ தோட்டத்தில் நுழைவுப் பகுதியில் இருந்து தோட்டத்திற்கு செல்லக்கூடிய பகுதி வரை ஆங்காங்கே பல வகையான பழ மரங்கள் உள்ளன.

    சீனாவில் அதிகம் பயிரிடப்படும் பெர்சிமன் பழங்கள் பெரும்பாலும் நமக்கு அறியப்படாத பழமாக உள்ளது. இள மஞ்சள் மற்றும் இள ஆரஞ்சு நிறத்தில் பெர்சிமன் பழங்கள் இருக்கும். இந்த பழங்கள் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்டது. இவை தற்போது வரை விளைச்சலைக் கொடுத்து வருகிறது. இந்த பழவியல் தோட்டத்தில் பழங்களுக்கு என்றே தனி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு ஆப்பிள், ஆரஞ்சு, பீச், பிளம், பேரிக்காய் என பல பழவகைகள் கொத்துக் கொத்தாக மரங்களில் காய்த்து குலுங்குகின்றன.
    இதில் குறிப்பாக சீனாவை தாயகமாகக் கொண்ட பெர்சிமன் பழங்கள் ஆண்டுதோறும் ஜூலையில் காய்க்கத் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை காய்க்கும்.

    இந்த பெர்சிமன் பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது என கூறப்படுகிறது. சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் இருதய நோய்களுக்கும் இந்தப் பெர்சிமன் பழங்கள் உண்பது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு பெர்சிமன் பழங்களுடைய விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. இந்த தோட்டக்கலை பண்ணையில் 50 க்கும் மேற்பட்ட பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. ஒவ்வொரு மரத்திலும் சுமார் 200 கிலோ வரை பழங்கள் காய்த்து உள்ளன.
    ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை இந்த மரங்களில் பெர்சிமன் பழங்கள் அதிகமாக காய்த்து 1 கிலோ ரூ.100 முதல் ரூ.170 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    இந்த பழங்களில் வைட்டமின் சி என்ற நீர்ச்சத்து உள்ளதால் இதை மக்கள் அதிகமாக விரும்பி உண்பதற்காக வாங்கிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து தோட்டக்கலை பழப் பண்ணை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், "நீலகிரி மாவட்டத்தில் பிரிட்டன் போன்ற குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில், அங்கு வளரக் கூடிய பழ வகைகளை நீலகிரி மாவட்டத்திலும் பயிரிட்டு சாகுபடி செய்தனர். அந்த வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பழப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பிளம்ஸ், பீச், லிச்சி போன்ற பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன."   மேலும் இந்த பழ மரங்கள் அந்தந்தப் பருவத்துக்கேற்ப விளைந்து வருவது வழக்கம் எனவும் தற்போது, பெர்சிமன் பழ சீசன் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்தப் பழம் மற்ற பழங்களைப் போல நேரடியாக சாப்பிட முடியாது. மரத்திலிருந்து பறித்து ஒருநாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து கழுவி தோலை உறித்து சாப்பிட வேண்டும். இந்தப் பழ சீசன் தொடங்கும்போது சுற்றுலா  பயணிகள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
    சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் உள்ள பழ மரங்களில் தற்போது கொத்து கொத்தாக பெர்சிமன் பழம் பழுத்து தொங்குகிறது.
    பெர்சிமன் பழங்கள் குறித்து தாவர ஆராய்ச்சியாளர் ராஜன் கூறுகையில், “இந்தப் பழத்தில் வைட்டமின் A, B, E, கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

    பலரும் அறிந்திராத பெர்சிமன் பழங்கள் சுற்றுலாப்பயணிகள் மட்டுமன்றி அனைத்து மக்களும் குன்னூர் பழப்பண்ணையில் வாங்கிச் செல்லும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் விற்பனை செய்து வருகிறது” என தெரிவித்தார்.

    செய்தியாளர் : ஐயாசாமி -  நீலகிரி
    Published by:Siddharthan Ashokan
    First published:

    அடுத்த செய்தி