ஹோம் /நியூஸ் /நீலகிரி /

புத்தாண்டை வரவேற்க நடனமாடி கொண்டாடிய தோடர் இன பழங்குடியின மக்கள்..!

புத்தாண்டை வரவேற்க நடனமாடி கொண்டாடிய தோடர் இன பழங்குடியின மக்கள்..!

தோடர் இன மக்கள்

தோடர் இன மக்கள்

உதகை அருகே புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இன பழங்குடியின ஆண்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடிய “மொற்ட்வர்த்” விழாவில் அவர்களது எருமைகள் அபிவிருத்தி ஆக வேண்டும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

மலை மாவட்டமான நீலகிரியில்  தோடர் பழங்குடியின மக்கள் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரியில் மட்டுமே வசிக்கும் இந்த பழங்குடியின மக்கள் இன்றளவும் தங்களது பாரம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் புதியதாக தொடங்கும் புத்தாண்டு தங்களுக்கும், தாங்கள் மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கும் சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக  “மொற்ட்வர்த்”  என்று அழைக்கப்படும் புத்தாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த விழா தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழும் உதகை அருகே உள்ள முத்தநாடு மந்தில் நடைபெறும்.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் முத்தநாடு மந்தில் மொற்ட்வர்த் விழா இன்று நடைபெற்றது. அப்போது 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் “முன்போ” என்று அழைக்கப்படும் கூம்பு வடிவிலான தேக்கீஸ் அம்மன்  கோவில் மற்றும் “அடையாள்வேல்” என்றழைக்கப்படும் பிரை வடிவிலான கோவிலுக்கு சென்று புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர்.

Also see... திருவாரூர் மாவட்ட மக்களே... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

அப்போது தங்களது எருமைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் சிறப்பு வழிப்பாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து 15 குலத்தை சார்ந்த ஆண்களின் எண்ணிகைக்கு ஏற்ப தலா 1ரூபாய் வீதம் காணிக்கை செலுத்தினர்.

முன்னதாகா பிரார்த்தனை முடிந்தவுடன் கோவில் முன்பு தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடின மகிழ்ந்தனர். இறுதியாக தோடர் இன இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிபடுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கி பலத்தை காண்பித்தனர்.

செய்தியாளர்: ஐயாச்சாமி, ஊட்டி

First published:

Tags: Nilgiris, Ooty