ஜேசிபி மூலம் மாயாறு ஆற்று பாலத்தை கடக்கும் உதகை மக்கள்.. கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..
ஜேசிபி மூலம் மாயாறு ஆற்று பாலத்தை கடக்கும் உதகை மக்கள்.. கனமழையால் போக்குவரத்து பாதிப்பு..
மாயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Nilgiris District : உதகை நகரில் பிரதான சாலையில் விழுந்த ராட்சத மரமரத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் ஓட்டுநர். சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில் பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கூடலூர் பகுதிகளில் ஒரே நாளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலத்தைத் தாண்டி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாயாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தெப்பக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்கள் தங்களது அன்றாட வேலைக்கு மசினகுடி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மாயார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் மீது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேசிபி மூலம் ஆற்றை கடக்கும் மக்கள்..
இருப்பினும் பழங்குடியின மக்கள் தங்களது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் பழங்குடியின மக்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தெப்பக்காடு இக்கரையிலிருந்து மசினகுடி சாலையில் உள்ள அக்கறைக்கு பழங்குடியின மக்கள் ஏறிச் சென்றனர்.
ஜேசிபி மூலம் ஆற்றை கடக்கும் மக்கள்..
ஒரு மணி நேரத்திற்கு பின்பாக காட்டாற்று வெள்ளத்தின் அளவு குறைந்த பின்பு பாலத்தின் மீது இருந்த தண்ணீர் வடிந்தது அதன்பின்பு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் காட்டாறு செல்லும் பகுதியில் பாலங்களை கடக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழைகாரணமாக உதகை நகரில் பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனார். கார் ஓட்டுநர். சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மரம் விழுந்த பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்த பகுதியில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட. வாகனங்கள் நிறுத்தப்படும் காலை வேளை என்பதால் வாகனங்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறு கின்றனர்.
உதகை நகரில் பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்தது
சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதகையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொட்டி தீர்க்கும் கனமழையால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.