ஹோம் /நியூஸ் /நீலகிரி /

குறுக்க இந்த கெளசிக் வந்தா..! ஊட்டி மலைப்பாதையில் உலாவரும் ஒற்றை காட்டுயானை - வாகன ஓட்டிகள் அச்சம்

குறுக்க இந்த கெளசிக் வந்தா..! ஊட்டி மலைப்பாதையில் உலாவரும் ஒற்றை காட்டுயானை - வாகன ஓட்டிகள் அச்சம்

காட்டு யானை

காட்டு யானை

Ooty Elephant : உதகை கல்லட்டி மலைப்பாதையில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்....

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை கல்லட்டி மலைப்பாதையில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

உதகை கல்லட்டி மலைப்பாதையானது 36 கொண்டை ஊசி வளைவுகளை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்தப்பகுதியில் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானை, காட்டு மாடு, கடாமான், செந்நாய், உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த சாலைகளில் பயணிக்கும் போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருக்கும். இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலாவியது. அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

வாகனங்களைக் நோக்கி யானை நடந்து வந்தபோது வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச் சென்றனர். ஒரு வழியாக சாலையோரத்தில் யானை சென்றவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையைக் கடந்து சென்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

செய்தியாளர்: ஐய்யாசாமி ( ஊட்டி)

First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Ooty, Tamil News