உதகையில் சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டெருமையால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். உதகை நகரைச் சுற்றி பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது.
இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகளவு உள்ளன. பெரும்பாலும் வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டெருமைகள் வெளியேறுகின்றன.
தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் உலாவரும் காட்டெருமைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன.
மேலும் படிக்க: விளம்பர போஸ்டர்களில் எனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் - கடலூர் எம்.எல்.ஏ. அதிரடி!
இந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு எருமை ஒன்று வழிமறித்தது.
சுமார் ஒரு மணி நேரமாக காட்டெருமை வழி விடாமல் வாகனத்தின் நடுவே உலாவியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் காட்டெருமையை தாண்டிச் செல்ல வாகனம் முற்பட்டபோது காட்டெருமை தாக்க முயற்சித்தது. இதனால் அச்சமடைந்த சுற்றுலாப்பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு சாலை ஓரத்திற்கு காட்டெருமை சென்றவுடன் வாகனத்தை இயக்கி சென்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.